Home சினிமா இரண்டு கதாநாயகிகளுடன் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ படப்பிடிப்பு தொடங்கியது!

இரண்டு கதாநாயகிகளுடன் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ படப்பிடிப்பு தொடங்கியது!

‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படங்களில் நடித்து புகழ்பெற்ற ஏகன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஹைக்கூ.’

ஏகனுடன் ‘மின்னல் முரளி’, ‘சேஷம் மைக்கேல் பாத்திமா’ படப்புகழ் பெமினா ஜார்ஜ் மற்றும் ’கோர்ட்’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 1, 2026 இடுக்கியில் எளிய பூஜையுடன் தொடங்கியது. ’பேரன்பு’, ‘தரமணி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களின் இயக்குநர் ராம் முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்து படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

‘ஹைக்கூ’ படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், டாக்டர் டி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ’ஜோ’ திரைப்படத்தை இயக்கிய ஹரி ஹரன் ராம் இந்தப் படத்திற்கு கூடுதல் திரைக்கதை எழுதுகிறார்.

வலுவான கதைகளை தேர்ந்தெடுத்து உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முன்னணி ஓடிடி நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ். தற்போது நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் படம் வெளியாகும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்பே டிஜிட்டல் உரிமைகளை நெட்ஃபிலிக்ஸ் வாங்கியிருப்பது கதை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்