Home சினிமா வைரலாகும் ட்ரோன் ஷோ வீடியோக்கள்… திரைப்பட விளம்பரத்தில் புதிய அத்தியாயம் தொடங்கிய ‘வித் லவ்’ படக்குழு! 

வைரலாகும் ட்ரோன் ஷோ வீடியோக்கள்… திரைப்பட விளம்பரத்தில் புதிய அத்தியாயம் தொடங்கிய ‘வித் லவ்’ படக்குழு! 

வித் லவ்’ படக்குழு பலமுனைகளில் பல புதுமையான விளம்பரங்களைச் செய்து வருகிறது. அதன் ஒருகட்டமாக சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில், பொதுமக்கள் முன்னிலையில் பிரமாண்டமான டிரோன் ஷோ நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையாக நடந்த இந்த ஷோவில் 250 டிரோன்கள் இணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன்,  அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய அளவில், திரைப்பட விளம்பரத்திற்காக ட்ரோன் ஷோ நடத்தப்பட்ட முதல் முயற்சி என்பதால், இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. வானில் மின்னும் எழுத்துகளாக ‘With Love’ தோன்றிய தருணம், காதலின் உணர்வையும், இளமை துள்ளலையும் ஒருசேர வெளிப்படுத்தியது.
இந்த தனித்துவமான நிகழ்வில், ‘வித் லவ்’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் அந்த தருணத்தை பகிர்ந்து கொண்டனர். சினிமா விளம்பரம் என்பதையும் தாண்டி, இது ஒரு நவீன கலை நிகழ்வாகவும் பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் இந்த ட்ரோன் ஷோ வீடியோக்கள் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்