Home Uncategorized இம்மார்ட்டல் சினிமா விமர்சனம்

இம்மார்ட்டல் சினிமா விமர்சனம்

வாம்பயர், கிரியேச்சர் என கலந்து கட்டி ஹாலிவுட் ஹாரர் படங்களைப் போல் மிரட்டலான அனுபவம் தரும் இன்ட்ரெஸ்டிங்கான ‘இம்மார்ட்டல்.’

கனவுலகில் கவர்ச்சியான இளம் பெண் சிந்துவுடன் இனிமையாய் நாட்களைக் கடத்துகிறார் கதைநாயகன் ஜி வி பிரகாஷ். ஒரு கட்டத்தில் சிந்துவுடன் நெருங்குகிறார். அந்த சந்தர்ப்பத்திலிருந்து அவரை ஒரு வினோத மான்ஸ்டர் துரத்தத் தொடங்க, அதுவரை எரோட்டிக் திரில்லர் ரேஞ்சில் பயணித்த கதையின் போக்கு டிராக் மாறி ஹாரர், சர்வைவல் திரில்லர் என பல வித பரிமாணங்களுடன் வேகமெடுக்கிறது.

நடக்கும் பயங்கர சம்பவங்களால் ஜி வி பிரகாஷின் நிலைமை என்னவாகிறது? சிந்துவின் பின்னணி என்ன? என்பதெல்லாம் திரைக்கதையின் சுவாரஸ்யமான பக்கங்கள்… இயக்கம் மாரியப்பன் சின்னா

ஜி.வி. பிரகாஷ் தன்னைச் சுற்றி அமானுஷ்ய சம்பவங்கள் தொடங்கும் வரை ‘அடல்ஸ் ஒன்லி’ பிளேபாய் போல் வலம் வந்து, மனுஷன் வாழ்றான்யா’ என பெருமூச்சு விட வைக்கிறார். பின்னர் தன் மூச்சு பறிபோய்விடுமோ என்ற உயிர் காத்துக் கொள்ளும் போராட்டத்தில் பயத்தின் சதவிகிதத்தை பொருத்தமான முகபாவங்களில் காட்டி ஏற்ற பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். மான்ஸ்டரிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகள் பரபரப்புக்கு கேரண்டி.

கவர்ச்சி, கச்சிதமான நடிப்பு என அடித்து ஆடியிருக்கிறார் கயாது லோகர். அவருக்கும் ஜி வி பிரகாஷுக்குமான கெமிஸ்ட்ரி அசத்துகிறது.

இன்னபிற கேரக்டர்களில் வருகிறவர்களின் நடிப்பு கதையின் நகர்வுக்கு பலம் சேர்க்கிறது.

பின்னணி இசையால் காட்சிகளுக்கு சுறுசுறுப்பூட்ட 100% உழைப்பைக் கொட்டியிருக்கிறார் சாம் சி எஸ். பாடல்கள் குறிப்பாக ஜி வி பிரகாஷ் குரலில் வருகிற பாடல் உற்சாகத்துக்கு உத்தரவாதம்.

மான்ஸ்டர், கிரியேச்சர் என மிரட்டும் எபிசோடுகளுக்காக சிஜி, விஎஃப்எக்ஸ் துறையினர் ஒரு வருடம் உழைத்தார்களாம். அதன் பலனாக படம் தரம் கூடியிருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்