Home பொது உண்மைச் சம்பவ அடிப்படையில் கதை; எழில் கொஞ்சும் இடங்களில் படப்பிடிப்பு… இசைஞானி இளையராஜா குத்துவிளக்கேற்ற பூஜையுடன் துவங்கிய...

உண்மைச் சம்பவ அடிப்படையில் கதை; எழில் கொஞ்சும் இடங்களில் படப்பிடிப்பு… இசைஞானி இளையராஜா குத்துவிளக்கேற்ற பூஜையுடன் துவங்கிய ‘இராவணன் சோலையில் சிவன் மலை.’

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் படம் ‘இராவணன் சோலையில் சிவன் மலை.’

இந்த படத்தின் பூஜை விநாயகர் சதுர்த்தியான இன்று சென்னையில் அமைந்துள்ள இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் நடந்தது. இசைஞானி இளையராஜா, கங்கை அமரன், இயக்குநர் ஞான ராஜசேகர், இந்த படத்தை இயக்கும் பாணர், தயாரிப்பாளர் எ ஸ்.கே ஸ்ரீதர் ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.

படத்தில் ஆராதனா பட், ஸ்ரீ சத்யா, தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு, முத்துகாளை, ஆத்தங்குடி இளையராஜா, பிரபா, ஷர்மிளா, ஜனனி அம்மாள் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தென்னகத்தில் பல மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
இயற்கை எழில்கொஞ்சும் வெள்ளிமலை பகுதியில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது.
ஒளிப்பதிவு – எம் வி பன்னீர்செல்வம்
எடிட்டிங் –  காசி விஸ்வநாதன்
சண்டைப் பயிற்சி – மைக்கேல்
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்