சீனு ராமசாமியின் கதை, திரைக்கதை இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ படத்திலிருந்து ‘கானா விளக்கு மயிலே’ என்ற எனர்ஜிடிக்கான இரண்டாவது பாடலை நடிகர்கள் ஆர்யா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டுள்ளனர்.
வைரமுத்து எழுதியுள்ள இந்த நாட்டுப்புறப் பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
தென் மாவட்டங்களை மையப்படுத்திய பழிவாங்கும் ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவான இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இறைச்சி கடை உரிமையாளராகவும், காயத்ரி சங்கர் ஒரு செவிலியராகவும் நடித்துள்ளனர்.
சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சௌந்தரராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்.
இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். படம் மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஜீ வி பிரகாஷ் இயக்குநர் சீனு ராமசாமியுடன் இணைந்திருக்கும் இந்த படம் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
