இனிமையாய் நடந்த இனியாவின் பிறந்தநாள் கொண்ட்டாட்டம்… இணைந்து உற்சாகமூட்டிய அனோரா ஆர்ட் ஸ்டுடியோவின் முதலாம் ஆண்டுவிழா!

நடிகை இனியா தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கதைக்கேற்ற கதாபாத்திரமாக மாறி அசத்தலான நடிப்பாற்றல் மூலம் ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் இனியா நடிப்போடு பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இனியா கடந்தாண்டு ‘அனோரா ஆர்ட் ஸ்டூடியோ’ என்ற பெயரில் ஆடை வடிவமைப்பு நிறுவனம் துவங்கினார். பெண்களுக்கான ஆடைகள், உடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான அரங்கம் என எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் வழங்குவதில் அனோரா சிறந்து விளங்குகிறது.

இந்த ஸ்டூடியோ தனது முதலாவது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. இந்த விழாவோடு இனியாவின் பிறந்தநாளும் இணைந்து கொண்டாடப்பட திரைப் பிரபலங்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு இனியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இரண்டு நிகழ்வுகள் இணைந்த இந்த கொண்டாட்டம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here