Home சினிமா இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பின் தலைவரானார் டாக்டர் ஐசரி கணேஷ்!

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பின் தலைவரானார் டாக்டர் ஐசரி கணேஷ்!

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் 14.11. 2022 அன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சுப்பிரியவை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.

ஐசரி கணேஷுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், சஞ்சய் சுப்பிரியவுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர்.

மேலும் ஐசரி கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்