நவம்பர் 14 , 2022 அன்று சென்னை முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் இணையம் வழியாக மாணவர்கள் விளையாடும் விளையாட்டுகள் மற்றும்
சமூக வலைத் தளங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிய கருத்தரங்கம், பள்ளி வளாகத்தில் உள்ள CNR அரங்கில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் 6 ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ,உள்ளடக்கத் தலைவர், எஸ்கிமோ சமூக ஊடகத் தொழிற்சாலை மற்றும் ராஜ்பவனில் தொகுப்பாளராகப் பணியாற்றும் திருமதி.பிரசன்னா அழகர்சாமி அவர்கள் பங்கேற்று
சிறப்புரையாற்றினார். மாணவர்களிடையே நடைபெற்ற கருத்தரங்கில் இவர் பல்வேறு சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றி உரையாற்றினார். மேலும் இணையவழி விளையாட்டுகளால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அடிமையாவதால் அவர்களின் வாழ்க்கையில் வாழும் நெறி தவறி தவறான பாதையில் செல்வதால் ஏற்படும் சிக்கல்களையும் , எதிர்மறையான மாற்றங்களையும் பெற்றோர்களின் தாக்கத்தையும் விளக்கினார். இத்தகைய
சிறப்பான கருத்தரங்கில் மாணவர்கள் சமூக வலைத்தளங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதாகவும், இணையத்தள விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் அதைத் தவிர்ப்பதாகவும் மாணவர்கள் உறுதியளித்தனர். மேலும் இந்நிகழ்வு குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தின் முன் முயற்சியாக அமைந்து மாணவர்கள் கற்றலில் நாட்டம் செலுத்துவதற்கான சிறந்த கருத்தரங்கமாக அமைந்து எதிர்காலச் சமூகத்திற்கு நல்ல வழிகாட்டுதலாக அமைந்தது.