Home சினிமா அம்மா என் தங்ககனி நீதானே எல்லாம் இனி… இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல்...

அம்மா என் தங்ககனி நீதானே எல்லாம் இனி… இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து கொம்பு சீவி படத்திற்காக பாடிய பாடல்!  

கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடித்துள்ள ‘கொம்புசீவி’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்.

கவிஞர் பா விஜய் வரிகளில் உருவான “அம்மா என் தங்ககனி,
நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்” என்ற உணர்வுபூர்வமான பாடலை இசைஞானி இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து மிகவும் சிறப்பாக பாடியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்பாடல் ‘கொம்புசீவி’ படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘டிஎஸ்பி’ என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள ‘கொம்புசீவி’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்