Home சினிமா ஐ நோபடி (I, Nobody) திரைப்பட விமர்சனம்

ஐ நோபடி (I, Nobody) திரைப்பட விமர்சனம்

அரசுப் பணியாளரான நாயகன் பிரித்விராஜ் வங்கி கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தற்செயலாகச் சிக்குகிறார். அது அவரது வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது. அதிலிருந்து அவர் மீள்வதற்கு எப்படியான சவால்களைச் சந்திக்கிறார் என்பதே திரைக்கதை… 

சராசரி மனிதனின் பயம், கோபம், இயலாமை என ஏற்றிருக்கும் கேரக்டருக்கான உணர்வுகளை சரியான மீட்டரில் வெளிப்படுத்தியுள்ளார் பிரித்விராஜ். அவருக்குன் நேரும் அவமானங்களும், சந்திக்கும் சிக்கல்களும் பரிதாபப்பட வைக்கின்றன.

பிரித்விராஜின் மனைவியாக வருகிற பார்வதி மேனன் நடுத்தர குடும்பத்தின் தலைவியாக, இரு பிள்ளைகளுக்குத் தாயாக தந்திருப்பது எதார்த்தமான நடிப்பு. இன்னபிற கதாபாத்திரங்களில் வருகிற ஹக்கிம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன், மதுபால், சங்கர் ராமகிருஷ்ணன் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருப்பதை பார்க்க முடிகிறது.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்திற்கு நல்ல மைலேஜ் தருகிறது. லிஃப்ட் அருகில் நடக்கும் சண்டைக் காட்சிக்கு அமைத்திருக்கும் கேமரா கோணங்கள் அசத்தல். ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை காட்சிகளுக்கு எனர்ஜி ஏற்றுகிறது. துள்ளலிசையில் சஜே கப்பே பாடலை  ரசிக்க முடிகிறது.

சாதாரண ‘நோபடி’ என்று காட்டப்படுகிற நாயகன் திடீரென ஏகப்பட்ட பேரை அடித்து துவம்சம் செய்து கமர்ஷியல் ஹீரோவாக மாறுவதை ஏற்க முடியவில்லை. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைந்திருப்பது உட்பட குறிப்பிட்டுச் சொல்ல குறைகள் இருந்தாலும்,

பவர், சிஸ்டம் என்றெல்லாம் சொல்லப்படுகிற அதிகார மையங்கள் சாதாரண மனிதர்களை எப்படியெல்லாம் நசுக்குகிறது என்பதையும் சமூக வலைத்தளங்களின் தாக்கத்தையும் எடுத்துக் காட்டிய விதம் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

சாதாரண ‘நோபடி’ என்று காட்டப்படுகிற நாயகன் திடீரென ஏகப்பட்ட பேரை அடித்து துவம்சம் செய்து கமர்ஷியல் ஹீரோவாக மாறுவதை ஏற்க முடியவில்லை. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைந்திருப்பது படத்தின் பலவீனம். படத்தின் நீளம் 168 நிமிடங்கள். அரை மணி நேரம் வரை சுருக்கியிருக்கலாம் என்ற உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை.

வழக்கமான கமர்சியல் மசாலாக்களை அதிகம் சேர்க்காமல் வித்தியாசமான த்ரில்லர் அனுபவம் தர முயற்சி செய்திருக்கிற இயக்குநர் நிசாம் பஷீரை பாராட்டலாம். அவரது மாஸ்டர் பீஸாக கருதப்படுகிற ‘ரோஷாக்’ என்ற படத்தை மனதில் வைத்து அதேபோன்றதொரு படைப்பாக இந்த படத்தை எதிர்பார்த்தால் ஏமாற வேண்டியிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்