சமூக விழிப்புணர்வு, ஆன்மிகத் தேடல், உண்மை வரலாறு ஒரு புள்ளியில் இணையும் ‘ஜம்பு மஹரிஷி.’ ஏப்ரல் மாதம் உலகமெங்கும் ரிலீஸ்!

சமூக விழிப்புணர்வுக்கான முக்கியமான ஒரு விஷயத்தை உள்ளடக்கமாக கொண்டு, திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் ஜீவ சமாதி அடைந்த ஜம்பு மஹரிஷியின் உண்மை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ஜம்பு மஹரிஷி.’கதையின் நாயகனாக அறிமுக நடிகர் பாலாஜி, கதாநாயகியாக‘மஸ்காரா’ அஸ்மிதாவும் நடித்துள்ள இந்த படத்தில் ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், ‘பாகுபலி’ பிரபாகர், வையாபுரி, கராத்தே ராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ‘தேனிசை தென்றல்’ தேவா இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்துள்ள பாலாஜி, பி. தனலட்சுமியுடன் இணைந்து படத்தை தயாரித்துள்ளார்.

படத்தில் கையாளப்பட்டுள்ள கருத்துக்காக சென்சார் அதிகாரிகளால் பாராட்டு பெற்று யூ சான்றிதழ் பெற்றிருப்பது இந்த படத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம்!

படம் தமிழ்,தெலுங்கில் வரும் ஏப்ரல் மாதம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.படக்குழு:-
இசை – ‘தேனிசை தென்றல்’ தேவா
பாடல்கள் – பாலாஜி, புவனேஸ்வர், ஜார்ஜ்
வசனம் – பி.புவனேஸ்வரன்
ஒளிப்பதிவு – பகவதி பாலா
நடன பயிற்சி – சிவசங்கர்
சண்டைப் பயிற்சி – டிராகன் பிரகாஷ்
படத் தொகுப்பு – ராஜ் கீர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here