‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த விவாந்த் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜெனி.’ இந்த படத்தில் ‘மைடியர் பூதம்’ படத்தில் குழந்தை நாயகனாக மிரட்டிய பரம் விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்திலும், மைதிலி, பிஜாய் மேனன், ஆக்க்ஷன் பிரகாஷ் ஆகியோர் பிரதான வேடங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும் நித்தியானந்தம்.பி இயக்கத்தில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
துஷ்ட ஆவி ஒன்று சிறுவனை ஆக்ரமிக்க முயல அதிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்க அந்த சிறுவனும் அவர் தந்தையும் போராடும் திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த இந்தப் படத்தின் கதை, திரைக் கதையை அறிவாற்றல்
துஷ்ட ஆவி ஒன்று சிறுவனை ஆக்ரமிக்க முயல அதிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்க அந்த சிறுவனும் அவர் தந்தையும் போராடும் திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த இந்தப் படத்தின் கதை, திரைக் கதையை அறிவாற்றல்பிதா எழுத வசனத்தை பாஸ்கர் ராஜ் எழுதியிருக்கிறார்.

ரசிகர்களை பதைபதைப்போடு பார்க்க வைக்கும் திரைப்படஉலகம் பிரமாண்டமாய் பிரபஞ்ச அளவுக்கு விரிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் குறுகிய முதலீட்டில் குறுகிய கால அளவில் நல்ல படைப்பாளிகளை மட்டுமே வைத்து அழுத்தமான படைப்பாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் பல வருடகாலமாக எழுத்தாளராக, தயாரிப்பாளராக வெற்றிகரமாக வலம் வந்தவர் தூயவன்.அவரது மகன் பாபு தூயவன் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று ‘கதம் கதம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். ‘இட்லி’ என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். அவரது மேற்பார்வையில் அவரது துணைவியார் ஏ. முஸ்தரி இந்த திகில் படத்தை தயாரித்திருக்கிறார்.
இந்த படம் ரசிகர்கள் உணர்வு பூர்வமான நல்ல படங்களுக்கு என்றென்றும் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
தொழில் நுட்பக்குழு:-
இசை – யுதீஷ்
ஒளிப்பதிவு – திரைப்படக் கல்லூரி மாணவர் கீதாகரன்
படத்தொகுப்பு – திரைப்படக் கல்லூரி மாணவர் ஹரிகுமரன்
இணைத் தயாரிப்பு – ஏ.எம்.சயீஃப்
நிர்வாக தயாரிப்பு – கே. தங்கராஜ்
இசை – யுதீஷ்
ஒளிப்பதிவு – திரைப்படக் கல்லூரி மாணவர் கீதாகரன்
படத்தொகுப்பு – திரைப்படக் கல்லூரி மாணவர் ஹரிகுமரன்
இணைத் தயாரிப்பு – ஏ.எம்.சயீஃப்
நிர்வாக தயாரிப்பு – கே. தங்கராஜ்

