ரவி தேஜாவுடன் நான்காம் முறையாக இணைந்த கோபிசந்த் மலினேனி! ரசிகர்களை குஷியாக்கிய போஸ்டர்.

தெலுங்கு திரையுலகில் ‘மாஸ் மஹாராஜா’ ரவி தேஜா – ‘மாஸ் மேக்கர்’ கோபிசந்த் மலினேனியின் கூட்டணி தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்துள்ளது.

இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைகிறது. டோலிவுட்டின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த புதிய படத்தை தயாரிக்கவுள்ளது. படத்திற்கு தற்காலிகமாக RT4GM என பெயரிடப்பட்டுள்ளது.

கோபிசந்த் மலினேனியின் முந்தைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களான கிராக் மற்றும் வீர சிம்ஹா ரெட்டியைப் போலவே, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தனித்துவமான  கதையை இந்த படத்திற்காக உருவாக்கியுள்ளார்.

RT4GM படத்தின் அறிவிப்பு போஸ்டர் ஒரு கிராமத்தில் நிலவும் பயங்கரமான சூழ்நிலையைக் காட்டுகிறது, அதில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது மற்றும் அபாயப் பலகை உள்ளது.  தீ பறக்கும் இந்த போஸ்டர் படம் குறித்த எதிர்பார்ப்பைத் தூண்டுவதாக இருக்கிறது.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி ஷங்கர் மிகப்பெரிய பட்ஜெட்டில், உயர்தர தொழில்நுட்பத்தில் திரைத்துறையின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் கைவண்ணத்தில், இப்படத்தைத் தயாரிக்கின்றனர். எஸ் தமன் இசையமைக்கிறார்.

இதுவரை தோன்றாத வித்தியாசமான  கதாபாத்திரத்தில் நடிக்கும் ரவி தேஜாவுக்கு இந்த படம் அவரது திரையுலக வாழ்வின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருக்கும். படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

படக்குழு:-
கதை, இயக்கம்: கோபிசந்த் மலினேனி
இசை: எஸ்.தமன்
மக்கள் தொடர்பு : வம்சி சேகர், சதீஷ் குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here