‘வில்வித்தை’ சினிமா விமர்சனம்

பொதுவாக நம்மூர் சினிமாக்களில் பெரும்பாலான ஹீரோக்கள், தான் பாதிக்கப்பட்டதால், அல்லது தன்னைச் சார்ந்தோர் பாதிக்கப்பட்டதால் கொதித்தெழுந்து குற்றவாளிகளை துவம்சம் செய்வார்களாகவே இருப்பார்கள். பெரிய ஹீரோக்கள் நாட்டை நாசமாக்குபவர்களை எதிர்த்துப் போராடுவார்கள்.

இந்த படத்தின் ஹீரோ முதல் ரகம். தன் வசிப்பிடத்தின் அருகிலிருக்கும் வீட்டில் ஒரு சிறுமி பாலியல் பாதிப்புக்கு ஆளாக ஒட்டுமொத்த குடும்பமுமே மரணத்தைச் சந்திக்கிறது.

ஹீரோ அதற்கு நீதிகேட்டு களமிறங்குகிறான். சட்டம் கடமையை சரியாக செய்யாத சூழலில் தானே காவல்துறை, தானே நீதிமன்றம் என தீர்மானித்து குற்றவாளிகளை குறிவைக்கிறான். அவனது திட்டமிடலும் செயலாக்கமும் பதற வைத்தாலும் நியாயமாகவே இருக்கிறது. இயக்கம் ஹரி உத்ரா

பெண் பார்க்கப் போகும்போது அத்தனை சாந்தமாக இருந்தவரா இவர் என்று ஆச்சரியப்படும்படி பாலியல் குற்றவாளிகளை பழிவாங்கும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் நாயகன் அருண் மைக்கேல் டேனியல்.

நாயகி ஆராத்யாவின் லட்சணமான முகவெட்டும், காட்சிகளுக்கேற்ப மாறுகிற முகபாவமும் ஈர்க்கிறது.

காவல்துறை அதிகாரியாக கெழுவை சுரேஷ்குமார், நாயகனின் அம்மாவாக கர்ணன்’ ஜானகி என இன்னபிற பாத்திரங்களை ஏற்றிருக்கிறவர்களின் பங்களிப்பு கதையோட்டத்தின் தேவையை சரியாக பூர்த்தி செய்திருக்கிறது.

வித்யாசாகரின் வரிகளில், ஏஜெ அலிமிர்ஸாக் இசையில் ‘வானிலே பால் நிலா’ பாடல் மனதை வருடுகிறது. பின்னணி இசை காட்சிகள் வேகமெடுக்க உதவியிருக்கிறது.

ரசிகர்களை திரளவைக்கிற அம்சங்கள் குறைவாக இருந்தாலும், பாலியல் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டால் மட்டுமே அப்படியான குற்றங்கள் கட்டுப்படும் என்பதை வலியுறுத்திய விதத்தில் வில் வித்தை பாராட்டுக்குரிய படைப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here