Home சினிமா ஹிந்திப் பட வரலாற்றில் 600 கோடி கிளப்பில் இணைந்து சாதனை… புதிய படங்கள் ரிலீஸானபின்னும் தொடர்ந்து...

ஹிந்திப் பட வரலாற்றில் 600 கோடி கிளப்பில் இணைந்து சாதனை… புதிய படங்கள் ரிலீஸானபின்னும் தொடர்ந்து ஓடி வசூல் குவிக்கும் ‘ஜவான்!’

ஜவான் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த ஹிந்தி திரைப்படமாக வரலாற்று சாதனை புரிந்துள்ளது.

ஜவான் அதிக வசூல் செய்த ஷாருக்கானின் இரண்டாவது படம் மட்டுமல்ல, 600 கோடி கிளப்பில் இணைந்த முதல் இந்தி படமாகவும் சாதனை செய்துள்ளது. மேலும் பல புதிய பட வெளியீடுகள் இருந்தபோதிலும், படம் தொடர்ந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது!

செப்டம்பர் 7, 2023 அன்று வெளியானதிலிருந்து, பாக்ஸ் ஆபிஸில் வரலாற்றை மாற்றி, புதிய சாதனைகளை எழுதி வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகள் படைத்துள்ளது.

புதிய வெளியீடுகளால் ஜவானின் அதிரடி வசூல் கொஞ்சம் கூட பாதிக்கப்படவில்லை, மேலும் மூன்றாவது வாரத்தில் கூட ரசிகர்கள் படத்தை ரசிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள் என்பது படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு சான்றாகும்.

ஜவான் இந்தியில் 525.50 கோடிகளையும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 584.32 கோடிகளையும் வசூலித்தது, அதே நேரத்தில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் படம் 1000 க்கும் மேற்பட்ட கோடிகளை ஈட்டி அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. தற்போது மொத்தமாக இப்படத்தின் வசூல் 1043.21 கோடியை தாண்டியிருக்கிறது! இந்த மிகப்பெரிய சாதனைகள் அனைத்தும் வெறும் 22 நாட்களில் தகர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்