‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ், வசந்த் ரவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘வெப்பன்.’
‘மில்லியன் ஸ்டுடியோஸ்’ எம்.எஸ். மன்சூர் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கும் இந்த படத்தில் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இந்த நிலையில், பரபரப்பாக நடந்துவந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அதையடுத்து, ‘இந்த படம் மறக்க முடியாத சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு நிச்சயம் கொடுக்கும்’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறது படக்குழு.
விரைவில் படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்த விவரங்கள் தெரியவரும்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: பிரபு ராகவ்
படத்தொகுப்பு: நாஷ்
கலை: சுபேந்தர் பி.எல்.
ஆக்ஷன்: சுதேஷ்
ஆடை வடிவமைப்பாளர்கள்: லேகா மோகன்
ஒலி கலவை & வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்
கலரிஸ்ட்: ஸ்ரீ
டிஐ லேப்: புரோமோ வொர்க்ஸ்
விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்: கோகுல்
ஒப்பனை: மோகன்
ஸ்டில்ஸ்: விஜய்
விளம்பர வடிவமைப்பு: தினேஷ் அசோக்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: காந்தன்
நிர்வாக தயாரிப்பாளர்: ரிஸ்வான்.ஏ
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா