Home சினிமா சுசீந்திரன் நான் சொன்னதைக் கேட்டு, மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக படத்தின் காட்சிகளை மாற்றியமைத்தார்! -‘2K...

சுசீந்திரன் நான் சொன்னதைக் கேட்டு, மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக படத்தின் காட்சிகளை மாற்றியமைத்தார்! -‘2K லவ்ஸ்டோரி’ பட விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேச்சு 

இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை மையப்படுத்திய படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் சுசீந்திரன் இயக்கியுள்ள ‘2K லவ்ஸ்டோரி’ திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் சுசீந்திரன், மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி எனக்கு மிக முக்கியமான படம். தயாரிப்பாளர் விக்னேஷுக்கு என் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஒரு திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது முக்கியம், அதை தன் படமாக எடுத்துச் செல்லும் தனஞ்செயன் சாருக்கு என் நன்றி. என்னை வாழ்த்த எனக்காக வந்த எழில் சார், அருள் தாஸ் அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் என்னை நம்பி பயணித்த நடிகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பிரேமலு ரிலீசான அன்று அது யாருக்கும் தெரியாது, அடுத்த ஷோவில் உலகத்திற்கே தெரிந்தது. அது போல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். பிரேமலு மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் என் நன்றிகள்” என்றார்.

படத்தை வெளியிடுகிற தயாரிப்பாளர் தனஞ்செயன், ”படம் பார்த்து இரண்டாம் பாதியில் எனக்கு சில காட்சிகளில் கருத்து வேறுபாடு இருந்தது, ஆனால் அதைச் சொல்லத் தயங்கினேன். ஆனால் சுசி சார் அதை நான் மாற்றி விட்டேன் என்றார், என் கருத்துக்களுக்கு மதிப்பு தந்தார். இயக்குநர்கள் என் படத்தில் கருத்துச் சொல்ல நீ யார்?, என் படத்தை அப்படியே ரிலீஸ் செய்வது என்றால், செய்! என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லாமல், நான் சொன்னதைக் கேட்டு, மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகப் படத்தின் காட்சிகளை மாற்றியமைத்த சுசீந்திரன் சாருக்காக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன், இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, நடிகை லத்திகா, நடிகை வினோதினி, நடிகர் முருகானந்தம், இயக்குநர் நடிகர் பாக்யராஜ் கண்ணன், நடிகர் பாலசரவணன், நடிகர் அருள்தாஸ், நடிகை திவ்யா துரைசாமி, இயக்குநர் எழில், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், அறிமுக நாயகன் ஜெகவீர் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்