Home Uncategorized ஜான் டோ சினிமா விமர்சனம்

ஜான் டோ சினிமா விமர்சனம்

‘ராட்சசன்’ பட பாணியில் பயங்கரமான கதையொன்றைச் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மதுமிதா.

ஹீரோ கேரள போலீஸ் அதிகாரி. அவர் கண்முன் ஒரு கார் வேகமாய் வந்து ஏரிக்குள் பாய, கூடவே அவரும் பாய்கிறார். காரை தண்ணீருக்குள்ளிருந்து வெளியில் எடுக்கிறார்கள். அதில் ஒரு சிறுவன் இறந்து போயிருக்கிறான்.

அதைத் தொடர்ந்து காரை ஏரியில் செலுத்தியது யார், சிறுவன் யார் என்பதையெல்லாம் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் அந்த அதிகாரி, அது சம்பந்தமாக தமிழ்நாட்டுக்கு வர வேண்டியிருக்கிறது. அவர் வரும்போது, ஹிருதய் என்ற ஒரு சிறுவன் காணாமல் போன கேஸில் தீவிரமாக இருக்கிறது தமிழ்நாடு போலீஸ்.

அதிகாரிக்கு கேரள ஏரியில் நடந்த சம்பவத்துக்கும் தமிழ்நாட்டில் சிறுவன் காணாமல் போனதற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது. அந்த கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்த அவரது சந்தேகம் உறுதியாகிறது.

என்ன தொடர்பு? கொலை எதற்காக? காணாமல் போன சிறுவன் என்னவானான்?

இந்த கேள்விகளுக்கான பதில்களாய் விரிகிற காட்சிகளில் பரபரப்பு எக்கச்சக்கம்.

துடிப்பான போலீஸ் அதிகாரி கேரக்டரில் கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார் அர்ஜுன்தாஸ். போலீஸ் என்றால் முறைப்பும் விரைப்புமாய் வந்து போகாமல் எல்லாவித உணர்வுகளையும் வெளிப்படுத்தும்படியான கேரக்டர். நடிப்பில் குறையில்லை. அந்த குரல்தான் சில தருணங்களில் வசனங்களை அழுத்தி மூச்சுத் திணறச் செய்கிறது.

ஒரு கட்டம் வரை இது என் கேஸ் என் ஸ்டேஷன் என அர்ஜுன்தாஸிடம் ஈகோ மோதல், பின்னர் விசாரணையில் கைகோர்ப்பு, ஒத்துழைப்பு என நடிப்பில் வெரைட்டி காட்டியிருக்கிறார் சஞ்சனா நடராஜன்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்