திரைப்படத் தயாரிப்பாளர் ஐபி கார்த்திகேயனின் மகளுக்கு திருமணம்! திரையுலகப் பிரபலங்கள் திரண்டு வாழ்த்து மழை.

தமிழ்த் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐபி. கார்த்திகேயன் தனது மூத்த மகள் டாக்டர் கருணா கார்த்திகேயனின் திருமண விழா மற்றும் வரவேற்பு விழாவை சிறப்பாக நடத்தியுள்ளார். திருமண வரவேற்பு மற்றும் திருமண விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கே. கலைசெல்வி மற்றும்  ஐ.பி. கார்த்திகேயனின் மகளான டாக்டர் கருணா கார்த்திகேயன் M.B.B.S., R. சகுந்தலா, DNDM, RIOGH, எழும்பூர், சென்னை மற்றும் பேராசிரியர் Dr. V. ராஜேந்திரன், M.D., மருத்துவப் பேராசிரியர் Govt. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை ஆகியோரின் மகனான டாக்டர் ஆர். ராஜ்குமார், எம்.பி.பி.எஸ்., அவர்களுடன் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார்.

நடிகர்கள் எம்.எஸ். பாஸ்கர், நாசர், சிபிராஜ், ஜனனி, கருணாஸ், கருணாகரன், முனிஷ்காந்த், சுபிக்ஷா, தீப்தி, பாபி சிம்ஹா, அபர்நதி, ஆரி, ரவீனா ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் தேனப்பன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, ஜி.தனஞ்செயன், 2டி என்டர்டெயின்மென்ட் ராஜசேகர் பாண்டியன், லலித்குமார், அபிதா வெங்கட், சுஜாதா விஜயகுமார்(ஹோம் மூவி மேக்கர்ஸ்), பிரேம் (மாலி & மான்வி), ராம் (ஷர்வந்த்ரம் கிரியேஷன்), இயக்குநர்கள் சிம்பு தேவன், தட்சிணா மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பு மற்றும் விநியோக தரப்பில் தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் தரப்பில் வெவ்வேறு கட்டங்களில் திட்டமிடப்பட்டு இருக்கும் பல சுவாரஸ்யமான திட்டங்களை இவர் வைத்துள்ளார். அந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here