Home சினிமா என் மனைவி கதை எழுதிய எஜமான், பொன்னுமணி படங்கள் வெற்றி பெற்றதைப்போல் உங்களின் மனைவி எழுதிய...

என் மனைவி கதை எழுதிய எஜமான், பொன்னுமணி படங்கள் வெற்றி பெற்றதைப்போல் உங்களின் மனைவி எழுதிய கதையில் உருவான இந்த படமும் வெற்றி பெறும்! -கண்நீரா பட விழாவில் இயக்குநர் கதிரவெனை ஊக்கப்படுத்திய இயக்குநர் ஆர் வி உதயகுமார்

வித்தியாசமான காதல் கதையாக மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள ‘கண்நீரா’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 4; 2025 அன்று படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உற்சாகமாக நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் கதிரவென், எங்களுக்கு ஆதரவு தந்து, இங்கு இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் திரையுலக ஜாம்பவான்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இவர்களுடன் அமர்ந்திருப்பதே மிக மகிழ்ச்சியாக உள்ளது. மலேசியாவில் தான் முழுமையாக இப்படத்தை, கஷ்டப்பட்டு உருவாக்கி உள்ளோம். எங்களுக்கு முழு ஆதரவைத் தந்த உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் உத்ரா சாருக்கு என் நன்றிகள்.

என் மனைவிதான் இப்படத்திற்குக் கதை எழுதி உள்ளார். மலேசியாவிலிருந்தபோது, இந்த கதையை என்னிடம் சொன்னார் மிக அருமையாக இருந்தது. இந்தப் படத்தை உருவாக்கலாம் என்று ஆரம்பித்தபோது, என் மனைவி கர்ப்பமானார், ஆனால் அப்போது கூட கண்நீரா படம் தான், என் முதல் குழந்தை என்று சொன்னார். அப்போதே இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. என் மனைவி தான் இப்படத்தை இயக்கியிருக்க வேண்டும் ஆனால் சில காரணங்களால் அவர் என்னையே இயக்கச் சொன்னார்.

ஒரு மிகச்சிறப்பான படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் ரசிக்கும் வண்ணத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை என் மனைவி இயக்க வேண்டியது, அவரிடம் சொன்ன போது, இரண்டாம் பாகத்திற்குக் கதை இருப்பதாகச் சொன்னார், அந்தக்கதையும் மிக அருமையாக இருந்தது. அந்தப்படத்தை மனைவி தான் இயக்கியுள்ளார். அந்தப்படத்தையும் முடித்து விட்டோம். நீங்கள் தான் முழு ஆதரவைத் தர வேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் ஹரி உத்ரா, உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. இந்த வருடத்தில் முதல் படம். மலேசியாவில் எடுத்த படத்தை, இங்கு பெரிய அளவில் வெளியிடுகிறோம். More 4 Production மிகச்சிறப்பாகப் படத்தை எடுத்துள்ளனர். மலேசியாவில் எடுத்ததால், இங்குள்ள ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் பல விசயங்களை மாற்றியுள்ளோம். முக்கியமான இப்படத்தின் இசை, அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். இப்படம் மிகப் புதுமையாக இருக்க, இயக்குநர் கதிரவென் தான் காரணம். அவர் நாங்கள் சொன்ன அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, முழு ஒத்துழைப்பு தந்தார். படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது, ஒவ்வொன்றாக வெளியாகும்” என்றார்.

இயக்குநர் ஆர் வி உதயகுமார், ”என்னுடைய முதல் வாழ்த்து, இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும் பாடல் மிக நன்றாக இருந்தது. இயக்குநருக்கு முதல் படம் போலவே இல்லை. முதல் படத்தில் பாடலெழுதிக் காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டார்கள் கதிரவென், கௌசல்யா தம்பதி. அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். என் மனைவி எழுதிய கதை தான் எஜமான். பொன்னுமனி அவர் எழுதிய கதை தான். அது போல் உங்கள் மனைவி எழுதிய கதையும் வெற்றி பெறும். டிரெய்லர் மிக அற்புதமாக இருக்கிறது. கண்ணெல்லாம் நீராக சுமந்து கொண்டு இருக்கிறது, விட்டுக்கொடுத்தலைப் பேசுகிறது இந்தப்படம்” என்றார்.

நீகழ்வில் கதையாசிரியர் கௌசல்யா நவரத்தினம், நடிகர் ரோபோ சங்கர், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன் உள்ளிட்டோரும் பேசினார்கள்.

படம் பற்றி:-

கதிரவென் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா.’ நாயகியாக சாந்தினி கவுர் நடிக்க, மாயா கிளம்மி, நந்தகுமார் என் கே ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் இயக்குநரும், நடித்துள்ள அத்தனைப் பேரும் மலேசிய வாழ் தமிழர்கள்!

கண்நீரா என்பதற்கு கண்ணுக்குள் இருக்கிற நீர் போல என்று பொருள். காதல் என்றாலே கண்ணீருக்கு பஞ்சமிருக்காது, அதோடு கதாநாயகியின் கதாபாத்திரப் பெயர் நீரா. இரண்டையும் இணைத்து கண்நீரா’ என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்