மோகன்லால் நடிக்கும் ‘விருஷபா – தி வாரியர்ஸ் அரைஸ்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடக்கம்! இன்னும் சில தினங்களில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் மோகன்லால் ஷனாயா கபூர், சஹரா எஸ். கான், ரோஷன் மேகா ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கும் ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படம்.

நந்தகிஷோர் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த படப்பிடிப்பு நவம்பர் மாதம் வரை நடைபெறும்.

மோகன்லால் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்திலிருந்து அவரது கதாபாத்திரம் மற்றும் தோற்றம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்ட போது… இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது.‌ காதல் மற்றும் பழிக்கு பழி வாங்கும் உணர்வு என இரண்டு தீவிர நேர் எதிர் முனைகளுக்கு இடையேயான மோதலை மையமாகக் கொண்ட இந்த ‘விருஷபா- தி வாரியர்ஸ் அரைஸ்’ பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராகும். அப்பா- மகன் இடையிலான உறவை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இப்படத்தின் முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என உறுதி அளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here