இசைஞானி இளையராஜா, இசைக்கலைஞர்களோடு இசையமைத்துப் பாடும் ‘கதை கேளு கதை கேளு.’ ஜெயா டி.வி.யில் தினமும் பார்க்கலாம்.

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா அவர்கள் கலந்து கொண்டு தனது இசை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி தான் ‘கதை கேளு கதை கேளு.’

இந்நிகழ்ச்சி சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் இரவு 9:00மணிக்கும் ,இரவு 11:00மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பு திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5:30 மணிக்கும் இரவு 10:00மணிக்கும் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் இசைஞானி அவர்கள் தனது ஆரம்ப கால நினைவுகளையும் பாடல் உருவான அனுபவங்களையும் கூறி இப்பாடலை இசைக்கலைஞர்களோடு இசையமைத்து பாடுகிறார். இதனை தொடர்ந்து திரையுலக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இசைஞானியிடம் கேட்கும் கேள்விகளுக்கு நகைச்சுவையோடு உரையாடி பதிலளிக்கிறார் இசைஞானி.

இந்த வார நிகழ்ச்சியில் திரையுலக இளம் பின்னணி பாடகர்கள் மற்றும் பாடகிகள் கலந்து கொண்டு இளையராஜாவுடன் சேர்ந்து பயணிக்கும் இந்நிகழ்ச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.நிகழ்ச்சியை ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்குகிறார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here