Home சினிமா இன்வெஸ்டிகேஷன் திரில்லர் சப்ஜெக்டில் கிருஷ்ணா நடிக்கும் 25-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் துவக்கம்! பிறந்தநாளில் வெளியானது...

இன்வெஸ்டிகேஷன் திரில்லர் சப்ஜெக்டில் கிருஷ்ணா நடிக்கும் 25-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் துவக்கம்! பிறந்தநாளில் வெளியானது அறிவிப்பு

வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் கிருஷ்ணா தன் திரைப்பயணத்தில் 25-வது திரைப்படம் எனும் மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்த திரைப்படம் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதையசம் கொண்டுள்ளது. தற்போதைக்கு “KK 25” என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தை மனு மந்த்ரா கிரியேஷன்ஸ் சார்பில் மஹேந்திர ராஜ் சந்தோஷ் குமார் தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் பால கிருஷ்ணன் இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் இவர்கள் இருவரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் திரைத்துறையில் களமிறங்குகின்றனர். முன்னதாக இயக்குநர் பால கிருஷ்ணன் ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’ திரைப்படத்தின் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்