கவின் கதையின் நாயகனாக நடிக்க, கென் ராய்சன் இயக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்த படத்தில் கவினுடன் பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் கவின் மற்றும் பிரியங்கா மோகன் முதன்முறையாக இணைந்திருப்பதால்.. இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
படத்தை திங்க் ஸ்டுடியோஸ் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்க, ஓஃப்ரோஇசையமைக்கிறார்.
படம் பற்றிய மற்ற விவரங்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளில் வெளியாகும்.


