கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘கண்ணப்பா’ படக்குழு… ரெட் கார்பெட்டில் ஜொலித்த நடிகர் விஷ்ணு மஞ்சு!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’ஹாரிசன் : அன் அமெரிக்கன் சாகா’ (Horizon: An American Saga) திரைப்படத்தின் பிரீமியர் காட்சி கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய திரையுலகின் மதிப்பிற்குரிய நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை அலங்கரித்தனர்.

டாக்டர் எம்.மோகன் பாபு, இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவியத் திரைப்படமாக உருவாகும் ‘கண்ணப்பா’-வின் நாயகன் விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது மனைவி விரானிகா மற்றும் ‘கண்ணப்பா’ படத்தின் நடன இயக்குநர் பிரபு தேவா ஆகியோரின் வருகை, பிரமாண்ட நிகழ்ச்சிக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதத்தில் அமைந்தது.

அட்லியர் விரானிகா வடிவமைத்த தனிச்சிறப்பம்சம் கொண்ட கருப்பு நிற டக்‌ஷிடோ உடையணிந்து கண்கவர் தோற்றத்தில் தோன்றிய நடிகர் விஷ்ணு மஞ்சு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும், அவருக்கான அதிநவீன தோற்றத்தை பாலிவுட் ஒப்பனையாளர் அனிஷா ஜெயின் சிறப்பாக வடிவமைத்திருந்தார்.

கெவின் காஸ்ட்னர் இயக்கிய ‘ஹாரிசன்: அன் அமெரிக்கன் சாகா’ திரைப்படம் அழுத்தமான கதை மற்றும் நட்சத்திர நடிகர்களால் பார்வையாளர்களைக் கவர்ந்தது. உலகெங்கிலும் உள்ள திறமை மற்றும் படைப்பாற்றலை ஒன்றிணைக்கும் சினிமா சிறப்பின் கொண்டாட்டமாக இப்படத்தின் பிரீமியர் காட்சி அமைந்தது.

நடிகர் விஷ்ணு மஞ்சு, தனது ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டுக்காக தற்போது கேன்ஸில் முகாமிட்டுள்ளார். கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை ஒலிம்பியா தியேட்டரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here