தேசிய விருது பெற்ற பாடகர் தில்ஜித் தோசாஞ் பாடிய பாடலால் புதிய இசை பரிமாணத்தைப் பெறுகிற காந்தாரா சேப்டர் 1  

தேசிய விருது பெற்ற நடிகர், பாடகர் தில்ஜித் தோசாஞ் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார்.
அதையடுத்து இன்ஸ்டாகிராமில் “காந்தாரா என்ற அற்புத படைப்பை உருவாக்கிய என் சகோதரர் @rishabshettyofficialக்கு பெரு வணக்கம். இந்த படத்துடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது, அதை  இப்போது சொல்ல முடியாது. ஆனால் திரையரங்குகளில் வராஹ ரூபம் பாடல் ஒலித்தபோது, பேரானந்தத்தில் கண்ணீர் விட்டேன்” என்று உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

வரவிருக்கும் ப்ரீக்வல் குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய தில்ஜித், “ஒரே நாளில் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்று குறிப்பிட்டு இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்திற்கு நன்றி தெரிவித்தார்.

படம் அக்டோபர் 2, 2025 அன்று  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

தில்ஜித் தோசாஞ் – ரிஷப் ஷெட்டி கூட்டணி இந்த படத்திற்கு புதிய இசை பரிமாணத்தை தருமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here