பெருந்தலைவர் காமராஜர் பற்றி இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள, ‘காமராஜ்’ திரைப்படம் ஜூலை 21-ம் தேதி ரீ ரிலீஸ்!

கர்ம வீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு ‘காமராஜ்’ என்ற பெயரில் தயாராகி, கடந்த 2004-ம் ஆண்டு தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. பத்திரிகை ஊடகங்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றிப் படமானது. அந்த வருடத்திற்கான தமிழக அரசின் சிறந்த திரைப் படத்திற்கான சிறப்பு விருதையும் வென்றது.

செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை எழுத, படத்தை ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கி, ரமணா கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். படத்தில் ‘காமராஜ்’ படத்தில் காமராஜரைப் போன்று உருவ ஒற்றுமையுள்ள ரிச்சர்ட் மதுரம் காமஜராக நடித்திருந்தார். அவருக்கு எம்.எஸ். பாஸ்கர் பின்னணி குரல் கொடுக்க, படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படத்தில் காமராஜரைப் போன்று உடல் ஒற்றுமையுள்ள ரிச்சர்ட் மதுரம் காமஜராக நடித்துள்ளார். காமராஜரின் குரலை நினைவுறுத்தும் விதமாக எம்.எஸ். பாஸ்கர் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இசை ஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை எழுதியுள்ளார்.

அதோடு இன்றளவும், சில முக்கிய அரசியல் நிகழ்வுகளின்போது, காமராஜ் திரைப்படத்தின் காட்சிகள் விமர்சனக் கணைகளாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

‘காமராஜ்’ திரைப்படம் வெளியானபோது பிறந்திராத புதிய தலைமுறையினர் தற்போது வாக்களிக்கும் உரிமையைப் பெற்று விட்டனர். அறம் சார்ந்த அரசியலை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படத்தை இந்த புதிய தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்க முடிவெடுத்துள்ளது ரமணா கம்யூனிகேஷன். அதையடுத்து பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு ‘காமராஜ்’ திரைப்படம் தமிழகமெங்கும் ஜூலை 21ம் தேதி மறுதிரையிடல் செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here