கண்ணப்பாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் அவ்ராம் மஞ்சுவின் ஃபர்ஸ்ட் லுக் கிருஷ்ண ஜெயந்தியில் வெளியீடு!

விஷ்ணு மஞ்சுவின் மகனும், பழம்பெரும் நடிகர் மோகன் பாபுவின் பேரனுமான அவ்ராம் மஞ்சு, மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் முன்னிலையில் இருக்கும் ’கண்ணப்பா’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இதன் மூலம் மஞ்சு குடும்பத்தின் பாரம்பரியத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, குழந்தை கண்ணப்பா அல்லது தின்னடுவாக நடிக்கும் அவ்ராமின் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

கண்ணப்பா, சிவபெருமானின் மதிப்பிற்குரிய பக்தரான பக்த கண்ணப்பாவின் கதையின் பிரமாண்டமான திரை படைப்பாக உருவாகும் இப்படம் பல தலைமுறைகளின் திட்டமாகும். இதில் விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, இளம் கண்ணப்பாவாக அவரது மகன் அவ்ராம் மஞ்சு கண்ணப்பாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் மூலம் தெலுங்கு திரையுலகில் பாரம்பரிய நட்சத்திர குடும்பமாக வலம் வரும் மஞ்சு குடும்பத்தின் வளமான பாரம்பரியத்தின் வளர்ச்சி தொடர்கிறது.

இப்படத்தில் மோகன்லால், பிரபாஸ், அக்‌ஷய் குமார், மோகன் பாபு, சரத்குமார், பிரம்மானந்தம், காஜல் அகர்வால் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இருக்கிறது.. 24 பிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க காட்சிகள் நியூசிலாந்து நாட்டில் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கூறுகையில், “இளைஞரான கண்ணப்பாவின் காலணியில் அவ்ராம் காலடி எடுத்து வைப்பதை பார்த்தது எனக்கு ஒரு உணர்வுபூர்வமான அனுபவம். இந்த படம் எங்கள் குடும்பத்தில் பல தலைமுறைகளை கடந்து வரும் கனவு. இது போன்ற ஒரு படத்தின் மூலம் அவ்ராமை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். சிறு சிறு செயல்கள் என்றாலும், அதை மிக சிறப்பாக அவர் திரையில் கொண்டு வரும் மேஜிக்கை அனைவரும் பார்ப்பதற்காக நான் கத்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here