தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தவர் குட்டி பத்மினி. பின்னர் கதாநாயகியாக பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து உயர்ந்தவர். தயாரிப்பாளராகி பல படங்களையும், டி.வி. சீரியல்களையும் தயாரித்தவர். பல மொழிகள் தெரிந்தவர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். அதனை பாராட்டும் வகையில் அவருக்கு, பெங்களூரு உலக சினிமா விழாவில் ‘தாதா சாகிப் பால்கே’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.