கே சி பிரபாத் பில்லா பாண்டி படம் மூலம் தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராக கால்பதித்தார். அந்த படத்தில் நடிகராக வில்லன் பாத்திரத்திலும் கலக்கியிருந்தார். தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, அங்காரகன் போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். தவிர, கருப்பு பெட்டி எனும் திரைப்படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார். அந்த படம் வரும் அக்டோபர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அதையடுத்து கே சி பிரபாத் யாமம்’ எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் இரவு நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது, திடீரென இதயத்தில் வலி ஏற்பட, அவரை படக்குழு சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்யபட்டு உடல்நலம் தேறி, சிசிச்சை பெற்று வருகிறார்.