Home பொது இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷுக்கு காசு மாலையணிவித்து பாராட்டிய பாடகர் வேல்முருகன்… மூன்றாம் முறையாக தேசிய...

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷுக்கு காசு மாலையணிவித்து பாராட்டிய பாடகர் வேல்முருகன்… மூன்றாம் முறையாக தேசிய விருது பெற்றதற்கு கெளரவம்!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் மூன்றாவது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.
இந்த மகிழ்ச்சிகர செய்தியை முன்னிட்டு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரைப் பின்னணி பாடகர்  வேல்முருகன் நேரில் சந்தித்து புத்தம் புது நாணயங்களினால் உருவாக்கப்பட்ட காசு மாலையை அணிவித்துப் பாராட்டி வாழ்த்தினார். அத்துடன் சபரிமலை ஐயப்பன் கோவிலின் பிரசாதத்தையும் வழங்கினார். பிரபல இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் உடனிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்