Home பொது 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஷாருக்கான் – கரீனா கபூர் கான்… ‘கிங்’ படத்தின்...

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஷாருக்கான் – கரீனா கபூர் கான்… ‘கிங்’ படத்தின் ‘டாடி கூல்’ பாடல் வெளியீடு!

கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகவுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய பாடலான ‘ கூல் (கிங் வெர்ஷன்)’ மூலம் நடன அரங்கையே அதிர வைத்துள்ளனர் ஷாருக்கான் மற்றும் கரீனா கபூர்!
‘து மில் ஜாயே’ பாடலில் காதல் நாயகனாகவும் அதிரடி ஆக்‌ஷன் அவதாரத்திலும் ரசிகர்களைக் கவர்ந்த ஷாருக்கானின் ‘கிங்’ திரைப்படத்தின் அடுத்த பரிமாணம் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் புதிய பாடலான ‘டாடி கூல் (கிங் வெர்ஷன்)’ ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் ஷாருக்கானுடன் கரீனா கபூர் கான் இணைந்துள்ளார். இந்தி சினிமாவின் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இந்த ஜோடி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணைந்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உற்சாகமான இசை, கவர்ச்சியான ரிதம், ரெட்ரோ நடன அசைவுகள் என உலகப் புகழ்பெற்ற ‘டாடி கூல்’ பாடலுக்கு புதிய பாலிவுட் வண்ணம் கொடுத்துள்ளனர். ஷாருக்கான் தனது வழக்கமான ஸ்டைல் மற்றும் வசீகரத்துடன் நடனமாட, கரீனா கபூர் கான் தனது அழகான திரைத் தோற்றத்தால் பாடலுக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளார். இருவரின் கெமிஸ்ட்ரி மீண்டும் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
போனி எம். பாடிய உலகப் புகழ்பெற்ற ‘டாடி கூல்’ பாடலின் அடிப்படையில், ஃபிராங்க் ஃபேரியன் மற்றும் ஜார்ஜ் ரெயாம் எழுதிய பாடல் வரிகளுக்கு புதிய இசை வடிவம் கொடுத்துள்ளனர் சச்சின் – ஜிகர். தேசிய விருது பெற்ற பாடகர்கள் அரிஜித் சிங் மற்றும் ஷில்பா ராவ் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் வைபவி மெர்ச்சன்ட் நடன அமைப்பை மேற்கொள்ள, குமார் இந்திப் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
மெட்டாவின் முக்கிய நிகழ்வான ‘ஹவுஸ் ஆஃப் இன்ஸ்டாகிராம் 2026’ நிகழ்ச்சியில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவின் 700-க்கும் மேற்பட்ட முன்னணி படைப்பாளர்கள் கலந்துகொண்டு பாடலின் வெளியீட்டைச் சிறப்பித்தனர்.
கிறிஸ்துமஸ் வெளியீட்டை முன்னிட்டு ‘கிங்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வரும் நிலையில், 2026-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘டாடி கூல் (கிங் வெர்ஷன்)’ பாடலை Zee Music Company மற்றும் T-Series நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் காணலாம்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘கிங்’ திரைப்படம், வரும் டிசம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்