வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிக்கும் ‘கொன்றால் பாவம்’ ரிலீஸுக்கான பணிகள் தீவிரம்!

வரலக்‌ஷ்மி சரத்குமார் – சந்தோஷ் பிரதாப் நடிக்கும் படம் ‘கொன்றால் பாவம்.’
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்று பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் இந்த வருட கோடை விடுமுறையில் வெளியாகவிருக்கிறது.
படத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயகுமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், டி.எஸ்.ஆர். ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஸ்ரீ மோகன் ஹபுவின் பிரபலமான கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
தயாள் பத்மநாபன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். கன்னடம் தான் இதன் மூலக் கதை என்றாலும் தெலுங்கு மற்றும் தமிழிலும் தயாள் பத்மநாபனே இயக்குவதோடு ஜான் மகேந்திரனுடன் இணைந்து வசனமும் எழுதுகிறார்.
தெலுங்கில் இந்தப் படத்தை அல்லு அரவிந்த் ஆஹா ஒரிஜினல் ஓடிடி தளத்திற்காகத் தயாரிக்கிறார்.
பிரதாப் கிருஷ்ணா, மனோஜ் குமார் EINFACH ஸ்டுடியோஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். டி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

 

தொழில்நுட்பக் குழு:
கான்செப்ட்: மோகன் ஹபு
இசை : சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு: ஆர். செழியன்
எடிட்டர்: ப்ரீத்தி பாபு
கலை இயக்குநர்: விதால் கோசனம்
பாடல் வரிகள்: பட்டினத்தார், கபிலன், தயாள் பத்மநாபன்
நடன இயக்குநர்: லீலா குமார்
ஒலிக்கலவை: உதய் குமார்
எக்ஸிக்யூடிவ் புரொடியூசர்: வினோத் குமார்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா டி’ஒன்
ஒப்பனை: சண்முகம்
உடை: சக்ரி
ஆடை வடிவமைப்பாளர்: மீரா சித்திரப்பாவை
விளம்பர வடிவமைப்பாளர்: நவீன் குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here