புதிய திரைப்படங்கள், புதிய திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள்… கலைஞர் தொலைக்காட்சியின் சுதந்திர தின கொண்டாட்டம்!

கலைஞர் தொலைக்காட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.

ஆகஸ்ட் 15 காலை 9 மணிக்கு சுதந்திர தினத்தை போற்றும் சிறப்பு நிகழ்ச்சியும், காலை 9:30 மணிக்கு அமீர்கானுடன், எஸ்.ஜே.சூர்யா பங்குபெறும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தின் சிறப்பு நேர்காணலும், காலை 10 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனியின் சிறப்பு பட்டிமன்றமும், காலை 11:00 மணிக்கு விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘கோப்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பகல் 12 மணிக்கு அனிருத், விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதனைத்தொடர்ந்து, பிற்பகல் 1:30 மணிக்கு அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரையரங்கில் வெற்றி நடை போட்ட ‘நெஞ்சுக்கு நீதி’ சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here