பூஜாவை வெளியேற்றுவாரா பொன்னி? எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் எபிசோடுகளுடன் கலைஞர் டி.வி.யின் ‘பொன்னி C/O ராணி.’

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் ‘பொன்னி C/O ராணி.’

பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடரில் புஷ்பவள்ளியின் மகளான பூஜா, பொன்னி குடும்பத்துக்கு எதிராக தனது சதி வேலைகளை தீவிரமாக்க அதனை பொன்னி எப்படி எதிர்கொள்கிறார் என்கிற கதைக்களத்தில் தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.ராணி.’ பொன்னி மில்ஸ் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் பொன்னிக்கு கடைசி வாய்ப்பை வழங்க, அதை சவாலோடு எதிர்கொள்ளும் பொன்னிக்கு பல்வேறு வகைகளில் மாயா மற்றும் பூஜாவால் தடங்கல் வர, ராணி மற்றும் தனது குடும்பத்தின் உதவியோடு பொன்னி இந்த சவாலை எப்படி எதிர்கொள்கிறார் என்கிற எதிர்பார்ப்போடு தொடர் சுறுசுறுப்பாக நகர்ந்து வருகிறது.

அதுமட்டுமின்றி, பொன்னியின் படிப்பு விஷயத்தை ராஜாராமிடம் சொல்ல, அது ராஜாராமுக்கு கோபத்தை கிளப்ப அடுத்த நடக்கப்போவது என்ன பூஜா பற்றிய விவகரங்களை ராணி சேகரிக்க, பூஜா வீட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா என்கிற எதிர்பார்ப்போடு தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here