கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் ‘பொன்னி C/O ராணி.’
பிரீத்தி சஞ்ஜீவ், ராதிகா சரத்குமார் நடித்துள்ள இந்த தொடருக்கு குடும்பங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தொடரின் நாயகியான பொன்னி, தன் மகனின் திருமணம் குறித்து எடுக்கப்போகும் அதிரடி முடிவு தான் தொடரின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.
பொன்னியின் மூத்த மகனான சூர்யா, பவித்ரா காதல் பிரிவுக்கு இடையே, பவித்ராவின் கர்ப்பம் தெரியவந்து வீட்டை விட்டு வெளியேற்றப்படும் பவித்ரா, பொன்னி வீட்டில் தஞ்சமடைய, பவித்ராவின் கர்ப்பத்திற்கு காரணம் தன் மகன் சூர்யா என தெரிய வரும் போது பொன்னி எடுக்கப்போகும் அதிரடி முடிவு என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.