முஸ்லீம் வீட்டில் அய்யனார் பாட்டு எடுத்தோம்! ‘கனல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சமயமுரளி பெருமிதம்

தி நைட்டிங்கேல் புரொடக்ஷன் (The Nightingale Production) பட நிறுவனத்தின் தயாரிக்க, சமயமுரளி இயக்கியுள்ள படம் ‘கனல்.’ காவ்யா பெல்லு, ஸ்ரீதர் மாஸ்டர், ஸ்வாதி கிருஷ்ணன், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் சமயமுரளி, “இந்த பங்ஷனில் முதலில் இருந்து பேசிய அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் சார்பாக ஒட்டுமொத்தமாக நன்றி சொல்லவேண்டும் என்றால் எம்.ஜி.ஆர் நகரில் இருக்கும் மக்களுக்குத் தான் சொல்லவேண்டும். கீழே இருப்பவர்கள் எல்லாம் மேலே வரவேண்டும் என்பது தான் இப்படத்தின் கரு. எம்.ஜி.ஆர் நகரில் வாழும் பானு அக்கா ஒரு முஸ்லீம். ஆனால் அவர் வீட்டில் தான் அய்யனார் சாங் எடுத்தோம். பணம் மட்டும் சந்தோசம் அல்ல என்பதை எம்.ஜி.ஆர் நகர் மக்களிடம் தான் கண்டோம். அங்கு எல்லா மக்களும் சந்தோசமாக இருப்பார்கள். இந்தப்படம் எடுத்த பிறகுதான் பாட்டு வைக்கணும் என்று தோன்றியது. சென்னை மண்ணு என்ற பாட்டை எழுதினோம். அதை கானாமுத்து அழகாக பாடியிருந்தார். தென்மாவின் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தைப் பார்த்துவிட்டு அவரை அணுகினேன். சதிஷ் சக்ரவர்த்தி தென்மா இருவரும் மியூசிக் பண்ணிருக்காங்க. ஜெய்பாலா ஒரு தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல் எல்லாமுமாக வேலை செய்தார்.

ஸ்வாதி நல்லா நடிச்சுக் கொடுத்தார். காவ்யா நிறைய பெண்களை நடிக்க அனுப்பினார். பின் அவரையே நடிக்கச் சொன்னேன். ஆனால் அவர் இவ்வளவு அழகாக நடிப்பார் என்று நினைக்கவில்லை. அவர் பெரிய நடிகையாக வருவார். இந்த சினிமாத்துறைக்கு வருவதற்கு என்னை அனுமதித்த என் மனைவிக்கும் நன்றி. இந்தப்படம் வெற்றி பெறுவதற்கு மீடியா சப்போர்ட் வேணும்” என்றார்.

இசையமைப்பாளர் தென்மா, “கானாமுத்து வழியாக இந்தப்படம் எனக்கு வந்தது. இந்தப்படத்தின் பாடல்வேலைகள் மிகவும் சவாலாக இருந்தது. இந்தப் புது படக்குழுவிற்கு இந்தப்படம் நல்ல அடையாளத்தை கொடுக்கும்” என்றார்.

சிறப்பு விருந்தினர் ராதாரவி, “இந்தக் கனல் படத்தின் நாயகி காவ்யா சகோதரி நல்லா தமிழ் பேசினாங்க.  சமயமுரளி இந்தப்படத்தின் கதையைச் சொன்னார். அருமையாக இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களை நாம் குட்ட குட்ட அவர்கள் சிலிர்த்தெழுவார்கள். இயக்குநர் இப்படியொரு கதையை எடுத்ததுக்கு ஹேட்ஸ் ஆப். சிலர் நான் கீழ இருந்து வந்தேன் அதனால் இப்படி படம் எடுத்தேன் என்பார்கள். ஆனால் சமயமுரளி மேலே இருந்து வந்தவர். இப்பலாம் யார்யார்லாமோ நடிக்க வந்துட்டாங்க. நானூறு படம் நடிச்சிட்ட பிறகும் நானே சிலரிடம், நான் நல்லா நடிப்பேன்னு சொல்ல வேண்டியதிருக்கு.

எல்லாரும் ஓடிடி ன்னு சொல்லிட்டிருக்காங்க. படம்னா தியேட்டர்ல தான் பார்க்கணும். இந்தப்பொண்ணு காவ்யா தமன்னா போல அவ்ளோ கலரு. நல்லா நடிச்சிருக்கு பொண்ணு. அற்புதமான குருப் இது. சினிமாவைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஒற்றுமையாக இருங்கள். சினிமாவில் ஒற்றுமை தான் முக்கியம். கமல் எல்லாம் எவ்வளவு திறமை பாருங்க. இந்த நேரத்துலயும் நம்பர் ஒன் கலெக்‌ஷனை எடுத்தான் பாருங்க. அதான் திறமை. கீழ இருக்கவனை பத்தி படம் எடுக்குற சமயமுரளி மனசுக்கு இந்தப்படம் பெரிதாக ஹிட் ஆகும்” என்றார்

நடிகர்கள்:-

எழுத்து, இயக்கம் – சமய முரளி

இசை -தென்மா & சதிஷ் சக்ரவர்த்தி
ஒளிப்பதிவு – பாஸ்கர்
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி , திருமுருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here