சென்னை தீவுத்திடலில், கோடை கொண்டாட்டம் – 2022 என்ற பெயரில் மக்கள் கோடை விடுமுறையை குடும்பத்துடன் குளிர்ச்சியாகக் கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
‘ஃபோல்க்ஸ் வேர்ல்டு’ (M/s Folks World) என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியை மாண்புமிகு மத்திய அமைச்சர் (ராஜ்யசபா எம்.பி) வில்சன் மற்றும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி இருவரும் இணைந்து ஜூன் 2-ம் தேதி வியாழன் மாலை தொடங்கி வைத்தார்கள் .
இந்த கொண்டாட்ட நிகழ்வானது குற்றால அருவி (Water Falls), பனிக்கட்டி உலகம் (Snow World) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்களுடன் பொழுதுபோக்கு வளாகம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ கார்னிவல் விளையாட்டுகள் (கார்னிவல் Games), 10க்கும் மேற்பட்ட புதுமையான நிகழ்ச்சிகள் (Special Shows) மற்றும் வசந்த் & கோ, ஆச்சி மாசாலா போன்ற வணிக அரங்குகளுடன் மிக பிரமாண்டமாய் நடைபெற உள்ளது.
கோடை கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள்…
* சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளித்து மகிழும் வகையில் சென்னையில் குற்றால அருவி
* கோடை விடுமுறையைக் குளிர்ச்சியாக்க பனிக்கட்டி உலகம் மற்றும் DJ Sound System with Stage
* குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்திட Giant Wheel, Tora Tora, Peacock, Watter Roller, Techno Jump போன்ற 15க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்களுடன் பொழுதுபோக்கு வளாகம்
* 3D தியேட்டர், கடல்வாழ் மீன்கள் காட்சியகம், பறவைகள் காட்சி, கண்ணாடி மாளிகை, பேய் வீடு, மேஜிக் ஷோ போன்ற பல்வேறு ஸ்பெஷல் ஷோ
* குழந்தைகளை குதுகலப்படுத்த புதுமையான தொழில்நுட்பங்களுடன் Augmented Reality Show
* வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் மலிவு விலையில் வாங்கி மகிழ 50க்கும் மேற்பட்ட சிறிய கடைகள்
* டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம்ஸ் மற்றும் பிரியாணி போன்ற உணவு அரங்குகள்
* ஏசி, வாஷிங் மெஷின், கிரைண்டர், டி.வி., போன்ற இதர வீட்டு உபயோகப் பொருட்கள் (Home Appliances) அனைத்தையும் சலுகை விலையில் வாங்கிட வசந்த் & கோ அரங்கம்
* மகளிர் மனம் மகிழ சமையலுக்கு தேவையான அனைத்து மசாலாக்கள் வாங்கிட ஏதுவாக ஆச்சி மசாலா (Aachi Masala) அரங்கு
* பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது.
* இந்த கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சியானது ஜூன் 2 முதல் 45 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
* இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* பொதுமக்கள் வசதிக்காக சென்னை நகரின் முக்கிய பகுதிகளிலிருந்து அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* பொருட்காட்சியின் (வரிகள் உட்பட) நுழைவுக் கட்டணம் ரூபாய் ரூ.60/- அறுபது மட்டும்)
பொருட்காட்சி நேரம்: திங்கள் முதல் சனிக்கிழமை வரை:
மாலை 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை / ஞாயிற்றுக் கிழமைகளில காலை 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை