‘விக்ரம்’ படம் ஒரு பார்வை -எழுத்தாளர் சரவணகார்த்திகேயன்
நன்று – ஆனால் எதிர்பார்த்த அளவு இல்லை.
டிஎஸ்பி துரைசிங்கம் பார்க்க வேண்டிய நார்கோடிக்ஸ் கேஸை சர்வதேச ஏஜெண்ட் விக்ரம் ஏன் பார்க்க வேண்டும்? அவர் ஏஜெண்ட் என்பதற்கான தடயங்கள் ஏதும் படத்தில் இல்லை – கொஞ்சம் ஆயுதங்களும் சில பழைய சகாக்களையும் காட்டுவது தவிர. படம் நெடுக வாயிலேயே விக்ரம் குறித்து பில்டப் தருகிறார்களே ஒழிய செயலில் ஏதும் காட்டுவதில்லை (இறுதியில் கால் எலும்பை வெட்டும் காட்சி தவிர). அது ஒரு பெரிய letdown.

முதல் பாதி ஒரு நல்ல துப்பறியும் படமாகத் தொடங்கி இரண்டாம் பாதியில் சாதாரண பழி தீர்க்கும் மசாலா + செண்டிமெண்ட் சினிமாவாகச் சுருங்கிப் போகிறது – nothing exciting. அதுவும் க்ளைமேக்ஸில் நாயகனும் வில்லனும் ‘ஒத்தைக்கு ஒத்தை’ மோதும் காட்சிகள். அனாவசியமாய் சூர்யா. பழைய விக்ரம் படத்துடன் லிங்க், கைதி படத்துடன் லிங்க் எல்லாம் தேவையற்ற செருகல்கள். இது ஏன் விக்ரம் பாத்திரமாக இருக்க வேண்டும்? வேறொரு ஆளாகவும் இருக்கலாம்தானே!
மாஸ்டரில் விஜய்க்காகச் சமரசம் செய்தது போல் இல்லாமல் இது பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் படமாகவே வந்திருக்கிறதுதான். ஆனால் மாநகரமும் கைதியுமே இதை விடச் சிறந்த படங்கள்.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நன்று.
ஃபஹத் ஃபாஸில் நல்ல நடிப்பு. விஜய் சேதுபதி அறிமுகக் காட்சி நன்று. ஆனால் மாஸ்டர் பவானி அளவு intense பாத்திரமாக இதில் அவர் ஏற்றிருக்கும் சந்தனம் பாத்திரம் திரளவில்லை.
கமல் ஹாசனின் பங்களிப்பு பரவாயில்லை.
பார்க்கலாம்.