ஓடிடியில் சிறப்பாக மக்கள் ஆதரவை பெற்று வெற்றிப் பெற்றுள்ளது மாமனிதன் திரைப்படம்.
உலகின் தலைசிறந்த 10 திரை மேதைகளில் ஒருவரான இங்மர் பெர்க்மன்ஸ் இயக்கிய திரைப்படம் வெர்ஜின் ஸ்பிரிங்.
அந்த திரைக் காவியத்தின் பெயரால் மேற்கு வங்காளத்தில் ஒரு திரைப்பட விழாவை நடத்தி வருகிறார்கள்.
உலக சினிமா ஆர்வலர்களும் மேற்கு வங்க திரைப்படக் கலைஞர்களும் இணைந்து நடத்தும் விழா இது.
அந்த விழாவில் மாமனிதன் திரைப்படம் சிறந்த திரைப்படம் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா,
சிறந்த இயக்குனர், மற்றும் சிறந்த நடிகர் என மூன்று விருதுகளை பெற்றுள்ளது.