பெயரோடு டாக்டர் பட்டம்; குடியை விட்டு வருஷம் ஆறாச்சு! முத்துக்காளையின் மாற்றம் முன்னேற்றம்!

காமெடி நடிகர் முத்துக்காளை ‘ஆல்கஹால் அனானிமஸ்’ என்ற ‘ஏஏ’ அமைப்பில் இணைந்து, கடந்த 5 வருடங்களாக குடிப் பழக்கத்தை விட்டு விட்டு, குடியில்லாத வாழ்க்கையில் 6-ம் ஆண்டில் மகிழ்ச்சியாக அடியெடுத்து வைக்கிறார்.

முத்துக்காளை இளங்கலை தமிழ் இலக்கியம் (B.Lit) இரண்டாம் ஆண்டு தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று, ஆல் பாஸ் ஆகியுள்ளார் என்பது இன்னொரு மகிழ்ச்சியான செய்தி.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே பி.ஏ வரலாறு படித்து, இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பிறகு, எம்.ஏ தமிழ் படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இரண்டு பட்டங்கள் பெற்ற நிலையில், தொடர்ந்து படித்து வருகிறார்!

இளமையில் வறுமையின் காரணமாக படிக்காததால், தற்போது படப்பிடிப்பிற்கு இடையிடையே தொடர்ந்து படித்து வருகிறார்!

கல்வியில் ‘டாக்டர் பட்டம்’ வாங்குவதை தனது லட்சியமாகக் கொண்டு, நடித்தும், படித்தும் வருகிற முத்துக் காளையின் லட்சியம் நிறைவேற வாழ்த்துவோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here