Home சினிமா பிரபாஸுக்கு ‘ புரொஜெக்ட் கே’ படக்குழுவின் பிறந்தநாள் வாழ்த்து! அர்த்தமுள்ள வாசகத்தோடு போஸ்டர் வெளியீடு!

பிரபாஸுக்கு ‘ புரொஜெக்ட் கே’ படக்குழுவின் பிறந்தநாள் வாழ்த்து! அர்த்தமுள்ள வாசகத்தோடு போஸ்டர் வெளியீடு!

திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா படைப்பாக பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கும் திரைப்படம் ‘ புரொஜெக்ட் கே’. இதில் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். அமிதாபச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவ்வப்போது படத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த தருணத்தில் படத்தின் நாயகனான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு பிரத்யேகமான போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் பிரபாஸின் கை காற்றில் தன் சக்தியைக் காட்டுவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனுடன் ‘நாயகர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உதிக்கிறார்கள்’ என்ற வாசகத்தை இடம்பெற வைத்து பிரபாஸின் நாயக பிம்பத்தை செறிந்த வீரத்துடன் விவரித்திருக்கிறார்கள்.

அந்த அர்த்தமுள்ள போஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்