மூன்று ஹீரோயின்களுடன் சத்யராஜ்… கவனம் ஈர்க்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்!

மூன்று ஹீரோயின்களுடன் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்துக்காக அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

மிக வித்தியாசமான கதையம்சத்தில் தாமிரா இயக்க, சத்யராஜுடன் சீதா, ரேகா, வர்ஷா பொல்லம்மா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

உருவாக்கிய குழுவினர்:
தயாரிப்பு: முகமது ரசித்
ஒளிப்பதிவு: பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்
இசை: மெல்லிசை மன்னர் வித்யாசாகர்
எடிட்டிங்: பார்த்தசாரதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here