ஸ்ரீகாந்த் கதாநாயகனான நடிக்க இயக்குநர் எஸ்.மணிபாரதி வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களைத் தொடர்ந்து எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்.’
வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ள இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகநடித்துள்ளனர். ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இதுவரை வெளிவந்துள்ள பெரும்பாலான படங்களில் கதாநாயகனோ, கதாநாயகியோ அல்லது வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் வழியாகவோ கதை சொல்லப்பட்டிருக்கும். இதில் முற்றிலும் மாறுபட்ட அம்சமாக ஊட்டியிலுள்ள ஒரு காட்டேஜில் இருக்கும் பெட்டின் பார்வையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலும் தேயிலைத் தோட்டங்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.
படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.மணிபாரதியிடம் கேட்டபோது “இப்படத்தின் தயாரிப்பாளர் விஜயகுமார், கதாநாயகன் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்கள்.
ஊட்டியின் கடுங்குளிரில் நள்ளிரவில் படமாக்கப்ப்பட்ட காதல் காட்சிகள் அனைத்தும் இப்படத்தின் உன்னதங்கள். புத்தாண்டின் தொடக்கத்திலேயே வர உள்ளதால் அனைவருக்கும் இப்படம் புத்தாண்டு கொண்டாட்டமாகவும் இருக்கும். படத்தை பார்த்தவுடன் வெளியிட முன்வந்த ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் கே..கந்தசாமி மற்றும் கே.கணேசன் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்” என்றார்.
கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, தாஜ்நூர் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுத, ஜே.பி எடிட்டிங் செய்ய, பழனிவேல் கலை இயக்கம் செய்ய, ஏ.வி பழனிசாமி தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிள்ளார். ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் தயாரித்துள்ளார்.

