கே ஜெ சுரேந்தர் செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கியிருக்கும் ‘மாயபிம்பம்’ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர்.சி வெளியிட்டு, படத்தின் ஒரு பாடலையும் பார்த்து படக்குழுவை பாராட்டினார்.
இந்த படத்தில் புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி எழுதியுள்ளனர்.
2005-ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படம் இந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

