சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து, கடந்த ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் ‘மாயோன்.’
‘டபுள் மீனிங்க் ப்ரொடக்ஷன்’ அருண்மொழி மாணிக்கம் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதி, தயாரித்திருந்தார்.
ஆன்மீகம் மற்றும் அறிவியல் என இரண்டை ஒரு சேர இணைத்து பேசிய இந்த படம் கனடாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 47வது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புராணங்களுக்கான திரைப்பட விருதை வென்றிருக்கிறது.
தற்போது அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி லைவ் போன்ற ஓடிடி தளங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் (Twitter Status) மாயோன் திரைப்படத்துக்கு 82% அளவில் எதிர்பார்ப்பு இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போது வரை மாயோன் படத்தின் ஓடிடி உரிமையை எந்த ஒரு நிறுவனமும் கைப்பற்றாத நிலையில் அந்த உரிமையை பெறுகிற நிறுவனத்துக்கு நிச்சயம் பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த ரெஸ்பான்ஸ் எந்ந்த ஓடிடி தளத்துக்கு கிடைக்கப் போகிறது என்பது விரைவில் தெரியவரும்!

