பிரபல பத்திரிகையாளர் ‘கோடங்கி’ ஆப்ரஹாம் எழுதி, இயக்கிய குறும்படம் ‘மலர்.’
ருச்சி சினிமாஸ் இணையதளம் & பாஸ்ட் மெஸஞ்சர் யூ டியூப் களம் இணைந்து தயாரித்துள்ள இந்த குறும்படம், தனது 7-வது வயதிலிருந்து வாழ்க்கைப் பாதை தந்த கசப்பான அனுபவங்களால் பாலியல் தொழிலாளியாகிப்போன ஒரு பெண்ணின் வலிகளை சுருக்கமாக, நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
யூ டியூபில் 1 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ள இந்த குறும்படத்தில், காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் பத்திரிகையாளர் ‘ஒற்றன்’ துரை. பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கு கலெக்ஷனுக்குப் போகிற துரை, போனஸாக அந்த விஷயத்துக்கு முயற்சித்து ‘முடியாமல்’ நுரை தள்ளுகிற காட்சி குறும்படத்தின் குறும்பான எபிசோடுகள்! அந்த காட்சிகளில் அசத்துகிறது ஒற்றன் துரையின் இயல்பான நடிப்பு!
பாலியல் தொழிலாளியைப் பார்த்து ‘புதுசா திருடுன புல்லட்டு மாதிரியே இருக்குற’ என்பதாகட்டும் கஸ்டமர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட ‘புதுப்பட ரிலீஸ் கணக்கால்ல இருக்கு கூட்டம்’ என்பதாகட்டும் வசனங்களில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை. அந்த வசனங்களைப் பேசியிருக்கும் விதத்திலிருக்கிற கிறக்கம் ஈர்க்கிறது!
ஒரு காட்சியில் பத்திரிகையாளர் சதீஷ் முத்து, காமப்பசி தீர்க்க பட்டு வேட்டி மைனராக வந்து போவது கலகலப்பு!
23 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தின் கடைசி ஐந்து நிமிடங்கள் உருக்கம்.
கன்டென்டில் கருத்து இல்லாமலா? அதுவும் இருக்கிறது.
பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை எட்டிய உற்சாகத்திலிருக்கிற படக்குழுவினருக்கு மனம்குளிர் வாழ்த்துகள்!