இந்த படம் வசூல்வேட்டை கண்டால் சிறிய படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள்! -‘மான்வேட்டை’ பட விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேச்சு

திருமலை இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மான்வேட்டை.’ ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா 14.12. 2022 அன்று சென்னையில் நடந்தது.நிகழ்வில் தயாரிப்பாளர் கே.ராஜன், “இந்த படத்தை கடின உழைப்பையும், அர்பணிப்பையும் அளித்து உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படம் வசூல்வேட்டை காண வேண்டும். இந்த படம் வெற்றி பெற்றால் பல சிறிய தயாரிப்பாளர்கள் வருவார்கள். இந்த படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் ஜேஎஸ்கே. சதீஷ்குமார், நல்ல படங்கள் எப்போதும் வெற்றி பெறும். அதற்கு, பக்கத்தில் இருக்கும் மலையாள, கன்னட மொழி படங்கள் மிகப்பெரிய உதாரணம். இந்த மான் வேட்டை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, “எல்லா விஷயங்களுக்கும் தோள் கொடுப்பவர் திருமலை. இந்த படம் சிறப்பாக உருவாகி இருகிறது. குறைந்த பட்ஜெட்டில் சிறப்பாக எடுக்கபட்டு இருக்கிறது. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் ரமேஷ் கண்ணா “இந்த படத்தின் டைட்டிலே அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. படத்தின் ஹீரோ சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சிறப்பான இசையை கொடுத்துள்ளார். படம் எதிர்ப்பார்பை அதிகரித்து இருக்கிறது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் “எனது நண்பன் தான் இந்த படத்தின் கதாநாயகன். கடின உழைப்பாளி, அவன் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும். இந்த மான்வேட்டை அந்த வெற்றியை கொடுக்கும் என்று நம்புகிறேன். திருமலை சினிமாவிற்காக உழைப்பவர்” என்றார்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை T Creations சார்பில் இயக்குநர் எம்.திருமலை தயாரித்துள்ளார்.

படக்குழு:
எழுத்து இயக்கம் – எம்.திருமலை (‘அகம் புறம்’, ‘தீநகர்’, ‘காசேதான் கடவுளடா’ படங்களை இயக்கியவர்)
இசை – ஶ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு – விஜய் வில்சன்
வசனம் – வேலு சுப்பிரமணியம்
படத்தொகுப்பு – சுதா, லக்‌ஷ்மணன்
பாடல்கள் – விவேகா , சொற்கோ கருணாநிதி, ஏக்நாத்
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here