தமிழ் ரசிகர்களுடன் ‘துணிவு’ படம் பார்க்க சென்னை வரும் நடிகை மஞ்சு வாரியர்!

நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, ‘துணிவு’ படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி வெளியாகி கோலிவுட்டில் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரம், வலிமையான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருந்தது. இதற்காக நடிகை மஞ்சு வாரியார் தன் உடலை வருத்திக் கொண்டு கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்திருந்தார்.இந்த படத்தை மஞ்சு வாரியர், கேரளாவில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார்.

படம் பார்த்தபின் பேசுகையில், ”படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்தேன். அதிரடி வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை. இது போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பயிற்சி அவசியம். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. கேரளாவில் இந்த படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன்” என்றார்.

படம் தென்னிந்தியா முழுவதும் பெரும் வெற்றியை பெற்றதால் இதனை பகிர்ந்து கொள்ள துணிவு’ படக் குழுவினர் மஞ்சுவாரியருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அத்துடன் ‘துணிவு’ படத்திற்கு அபிரிமிதமான ஆதரவை வாங்கியதற்காக‌ கேரள பார்வையாளர்களுக்கு படக்குழுவினர் தங்களுடைய மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.இந்நிலையில் ஜனவரி 20-ம் தேதிக்கு பிறகு நடிகை மஞ்சு வாரியர் சென்னைக்கு பயணம் மேற்கொள்கிறார். அதே நாளில் அவரது நடிப்பில் தயாரான ‘ஆயிஷா’ எனும் திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தில் ‘துணிவு’ திரைப்படத்தின் கண்மணி எனும் கதாபாத்திரத்திற்கு நேர் மாறாக ‘ஆயிஷா’ எனும் குணச்சித்திர வேடத்தில் மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.

இதனிடையே பரதநாட்டிய கலைஞரான மஞ்சு வாரியர், ஜனவரி மாதம் இருபதாம் தேதி சென்னையில் நடைபெறும் சூர்ய விழாவில் அவருடைய சமீபத்திய தயாரிப்பான ‘ராதே ஷ்யாம்’ எனும் நாட்டிய நாடகத்தை நிகழ்த்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here