பார்வையற்றவர்களுக்கு நாளை சிறப்பு காட்சி… பட வெளியீட்டு நாளில் ‘மாயோன்’ படக்குழு அசத்தல் முயற்சி!

ஆன்மிகத்தையும் அறிவியலையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘மாயோன்.’

சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்’ அருண்மொழி மாணிக்கம் தயாரித்து, படத்துக்கு திரைக்கதையையும் எழுதியுள்ளார். என்.கிஷோர் இயக்கியுள்ளார்.

நாளை வெளியாகவுள்ள இந்த படத்தைப் பார்க்க பார்வையற்றவர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டீஸரும் டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தவிர பார்வையற்றவர்களுக்காக பிரத்தியேகமாக ஒலிச்சித்திர வடிவில் (Audio Description)  டீஸர், டிரெய்லர் ஆகியவை வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

தவிர, இந்த படத்தின் விளம்பரத்துக்காக மாயோன் ரதம் என்ற பெயரில் பெருமாள் சிலையுடன் கூடிய ரதம் பயணித்து வருகிறது. இதற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் நாளை வெளியாக உள்ள இந்த படத்திற்காக சென்னையில் வடபழனி கமலா திரையரங்கில் காலை 8 மணிக்கு பார்வையாளர்களுக்காக ஒலிச்சித்திர வடிவில் படத்தை திரையிட படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன் மூலம் பார்வையற்றவர்களுக்கும் மாயோன் படத்தை பார்த்த முழு திருப்தி கிடைக்கும். மேலும் இந்த படத்திற்காக திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக பெருமாளுக்கு மிகப்பெரிய பேனர் சென்னை ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ‘சைக்கோ’ திரைப்படம் பார்வையற்றவர்களுக்காக பிரத்யேக பாணியில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here